top of page

MS VOLUNTEER

Public·10 volunteers

அவமானத்தின் சிறிய அளவு? (மனஉளைச்சல்)


"அப்போது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன, அவர்கள் நிர்வாணமாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்."


இந்தப் பகுதி பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 3:7ல் உள்ளது.


நம் முன்னோர்கள் பாவம் செய்தபோது நிகழ்ந்த முதன்மையான காரியத்தை கவனித்தீர்களா?

அவர்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தனர்.


ஒவ்வொரு பாவத்தையும் செய்த பிறகு, ஒரு வகையான வெறுமையை நாம் அறிகிறோம். சிலர் அதைப் பற்றிய குற்ற உணர்வாக உணரலாம். சிலர் தங்களை அவமானப்படுத்தப்படாதவர்களாக போல காட்டிக்கொள்ளலாம்.


அமைதியாக அமர்ந்து சிந்தித்துப்பாருங்கள். நாம் எப்போதாவது ஒரு பாவத்தில் ஈடுபடும்போது ஒருவிதமான அவமானத்தை உணர்ந்திருக்கிறோமா? நிச்சயமாக உணரவேண்டும். தேவனுக்கு முன்பாக நாம் மனிதர்களாக இருக்கிறோம். உணராவிட்டால், நம்மை மிருகம் என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். ஏனென்றால், மனிதனுக்கும் மிருகத்துக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் இந்த வெட்கம் உருவாகும் உணர்வுதான்.


பாவத்தினிமித்தம் வரும் அவமானத்தை நீக்கி நம்மைச் சுத்தப்படுத்துவது கிறிஸ்துவால் மட்டுமே முடியும். நம்முடைய குற்ற உணர்விலிருந்து நம்மை விடுவிப்பதற்காக அவர் தனது ஜீவனையே ஒப்புவித்தார்.


1. இயேசு கிறிஸ்துவால் மீண்டும் பிறந்தவன் - அவர் மூலமாக அவமானத்திலிருந்து விடுதலை பெறுகிறான்.


2. மனிதன் - பாவம் இருப்பதனால் அவமானமும் இருக்கிறது.


3. மிருக குணமுள்ள மனிதர்கள் - தாங்கள் அவமானப்பட்டாலும் அதை பெருமையாக கொண்டாடுகிறார்கள்.


இம்மூவரில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என உங்களை சோதித்து பாருங்கள்.


இதை உணர்ந்தவர்கள் மட்டுமே சகல ஆசீர்வாதங்களுடன் தேவனுக்கு முன்பாக நிற்க முடியும். தயவு செய்து ஷேர் செய்யுங்கள்.

About

This group is for registered volunteers of mission sagacity....

bottom of page