✨ *ஊக்கமளிக்கும் சிந்தனைகள் * 😁
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
★ *மனிதனுக்கு கீழ்ப்படியாமல் தேவனுக்கு கீழ்ப்படிவது *
*யாத்திராகமம் 1:15-21*
எபிரேய மருத்துவச்சிகளான சிப்பிராள், பூவாள் என்பவர்களுடைய சரித்திரமானது, மனிதனுடைய அதிகாரத்தைவிட தேவனுக்கு கீழ்ப்படிகிறதற்கான மிகச்சிறப்பான எடுத்துக்காட்டாகும். யாத்திராகமம் 1:15-21ல் இஸ்ரவேலருக்கு பிறந்த அனைத்து ஆண் பிள்ளைகளையும் கொலை செய்யும்படியாக எகிப்திய அரசனால் கட்டளை பெற்றார்கள். ஆனால், தேவன் மேல் இருந்த பயமும், மரியாதையும் மனிதனுடைய கொடூரமான கட்டளையை மறுக்க செய்தது. கர்த்தர் தான் உன்னதமான ராஜா என்பதையும், அவருடைய சட்டங்கள் மனித கட்டளைகளை விட உயர்ந்தவை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களுடைய ஞானத்தாலும் உண்மையாலும், அவர்கள் உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினர்களும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
இதே போன்ற உதாரணங்களை பரிசுத்த வேதாகமம் முழுவதும் நாம் காண முடியும். பாவம் செய்வதைவிட, தேவனை மட்டும் மகிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்ததினால், போத்திபாருடைய மனைவியின் வழியாக வந்த சோதனையை யோசேப்பு ஜெயித்தார், ராஜாவின் ஆணையை மீறுவதினால் தானியேலுக்கு பூமிக்குரிய தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்த பிறகும் தொடர்ந்து ஜெபித்தான். அதுபோலவே, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் அக்கினிச் சூளையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதும்கூட, பொற்சிலையை வணங்க மறுத்துவிட்டனர். கர்த்தர் அவர்களுடைய தைரியத்தையும் உண்மையையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாராட்டினார்.
நம் வாழ்விலும், தேவனை பின்பற்றுவதனால் சமூக அழுத்தங்களையும் அதிகாரங்களையும் எதிர்த்து நிற்க வேண்டிய சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலை வரலாம். அவ்வேளையில், தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பை சந்தித்தாலும், நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்தால்,
கர்த்தர் நம் கீழ்ப்படிதலை மதித்து, வேதாகமத்தில் உள்ள உண்மையுள்ள ஊழியர்களிடம் செய்தது போல் நமக்கும் நன்மைகளை செய்வார்.
*சிந்தனைக்கு:*
* எல்லாவற்றிக்கும் மேலாக கர்த்தருக்கு பயப்படுங்கள்; அவருடைய அதிகாரமே முதன்மையானது.
* கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, அவரை கனப்படுத்தும்போது, அவர் நம்மை ஆசீர்வதித்து பெலப்படுத்துவார்.
*📖 இந்த நாளுக்கான வேத வசனம் 📖*
* அப்போஸ்தலர் 5:29*
_"அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது"._
✍️ ✍️ ✍️ ✍️ Sis Shincy Jonathan Australia 🇦🇺
Transaltion by - Br Jaya Singh
Mission sagacity Volunteers
Comments