மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?
( எசேக்கியேல் 14 : 3 )
Son of man, these men have set up their idols in their heart, and put the stumblingblock of their iniquity before their face: should I be enquired of at all by them?
( Ezekiel 14 : 3 )
தேவ நாமம் மகிமைப்படுவதாக.
ஒரு சிறு சிந்தனை தேவனோடு சேர்ந்து சிந்திப்போம்.
மேலே மேற்கோள் காட்டப்பட்ட வேதவசனம், தேவன் இஸ்ரவேல் புத்திரரிடம் அவர்கள் தொடர்பாக பேசுவதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவப்பிள்ளைகளிடம் பேசுவது.
தேவன் சொல்வது தன்னுடைய ஜனங்கள் இருதயத்தில் வைத்திருக்கும் விக்கிரகங்களை குறித்துதான்.
இங்கே விக்கிரகம் என்று தேவன் குறிப்பிடுவது என்ன?
நீங்களும் நானும் எதற்கு இதயத்தில் முதலிடம் கொடுக்கிறோம்? தேவனுக்கா அல்லது நாம் சம்பந்தப்பட்ட அழிந்துப் போகக்கூடிய உலக காரியங்களுக்கா?
தேவன் மற்றும் தேவனுடைய ராஜ்யத்தை விட்டு விட்டு, உலக சிந்தனைகளையும் உலகில் உள்ள விஷயங்களையும் தேவன் விக்கிரகங்களாகக் கருதுகிறார்.
அதாவது நாளை பற்றிய கவலைகள்,
பொருள் உடைமைகள் பற்றிய எண்ணங்கள் மற்றும் அவற்றின் உரிமைகோரல், செல்வத்தின் மீதான ஆசை மற்றும் ஆவேசம்,
உறவினர்கள், மனைவி மற்றும் கணவன் பற்றி கவலை, குழந்தைகளைப் பற்றிய கவலைகள், மாமிச இச்சைகள் போன்றவை தேவனின் பார்வையில் விக்கிரகங்கள்.
தேவனுக்கு முதலிடம் கொடுக்காமல் இவற்றை முதன்மைப்படுத்துபவர்களின் அழுகைகளையும் ஜெபங்களையும் கர்த்தர் கேட்டு ஏற்றுக்கொள்கிறதில்லை
என்றே எசேக்கியேல் 14:3 கூறுகிறது.
ஆகவே, அன்பான தேவ பிள்ளைகளே, கர்த்தருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து, தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேடுவோம். அப்போது நமது பரலோகத் தந்தையின் கரங்கள் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நமக்குத் தரும்.
தேவன் உண்மையுள்ளவர்.
இந்த தெய்வீக ஆலோசனையின்படி, கர்த்தர் கொடுத்த இந்த பூமியில் கர்த்தர் கொடுத்த வாழ்க்கையை வாழலாம்.
தேவனுடைய நாமத்துக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏🏼
Written by-✍✍✍✍✍✍✍✍✍✍✍
Bro Vishwanath Divakaran
Translation by '✍✍✍✍✍✍✍✍✍✍✍
Sis Tephila Mathew
Comments