top of page
Writer's picturekvnaveen834

Special Thoughts

💕💕💕💕💕💕💕💕💕

"தேவனின் சித்தத்தைத் தேடும் ஜெபங்கள்: இன்னல்களுக்கு மத்தியில்"

💝 லூக்கா 22:42

பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

இந்த ஜெபத்தை செய்தவர் மற்றும் அவர் படப்போகிற பாடுகளின் கொடூரம் இவற்றை நாம் புரிந்து கொண்டால் இந்த ஜெபத்தின் ஆழம் நமக்கு புரியும. ஆம், அது வேறு யாரும் அல்ல நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான். ஒரு முழுமையான மனிதனாக, கிறிஸ்து மிகுந்த வேதனையையும் பயங்கரமான மன கஷ்டத்தையும் அனுபவித்தார். தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு ஒன்றும் தோன்றாத நேரம். இது போன்ற இதயத்தை பிளக்கும் தருணத்தில் தான் கிறிஸ்து இந்த ஜெபத்தை செய்கிறார். நம் வாழ்க்கையின் இத்தகைய பயங்கரமான சூழ்நிலையில் தேவசித்தத்தை விசாரிப்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, அதிலிருந்து பிரிந்து செல்வதற்கான நமது விருப்பங்கள் மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்கும்.

நமது வாழ்க்கைச் சுழற்சி தொடரும் போது... நாம் ஆதரவற்றவர்களாகவும், குரல் எழுப்ப முடியாதவர்களாகவும், ஒரு முடிவை எடுக்க இயலாதவர்களாகவும் இருக்கும் பல சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடலாம். இது நமது குடும்ப வட்டங்களில், நமது சபைக்குள்ளில், நமது ஆளுமையில் அல்லது நம் வாழ்வின் வேறு எந்த அம்சங்களிலும் நிகழலாம்.

எனவே, சரியான முன்மாதிரியான கிறிஸ்துவின் மீது சாய்ந்துகொண்டு இந்த காலகட்டத்தை எப்படி தைரியமாக எதிர்கொள்வது என்பதை பார்ப்போம்.

1️⃣ தேவசித்தத்துக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு நமது மனநிலையை ஒப்புக்கொள்வோம்.

லூக்கா 22:42

கிறிஸ்து தனது முழு இருதயத்தையும் அவருடைய விருப்பத்தையும் பிதாவிடம் திறந்தார், ஆனால், கடவுளின் சித்தத்திற்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு செய்தார். அதுதான் விஷயம்.

சில சமயங்களில் நம்முடைய சூழ்நிலைகள் தேவ சித்தத்தைத் தேடாமல் இருக்க நம்மைத் தூண்டலாம். மாறாக, நம் விருப்பத்தை மட்டும் நிறைவேற்றும்படி ஜெபிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். இது நம் தவறு அல்ல, அந்த சூழ்நிலையின் பயங்கர தன்மை.

ஆனால், அவருடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம்முடைய ஒவ்வொரு கவலையையும் அவரிடம் ஒப்புக்கொள்ள முடிந்தால், அந்தத் தருணம் என்றென்றும் வெற்றி பெற்றதாகவே இருக்கும்.

2️⃣ நமது பாதிப்புகளை மிஞ்சும் கர்த்தரின் வலிமை பற்றிய கருத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

லூக்கா 22:43

"அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்."

கிறிஸ்துவை பலப்படுத்த ஒரு தேவதூதனின் வருகையை இங்கே காண்கிறோம்.

தேவன் நமக்கு உத்தேசித்துள்ள சில துன்ப அனுபவங்கள் வரலாம். இல்லை, இது நமது குறைகளால் அல்ல. ஆனால் சில மதிப்புமிக்க படிப்பினைகளால் நாம் அறிவொளி பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அந்த கடினமான தருணங்களுக்கு மத்தியில், நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட தேவனுடைய வலிமையின் பரந்த தன்மையை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். நம் ஆண்டவர் தம்முடைய வெல்ல முடியாத வலிமையால் நம்மை ஊக்குவிப்பார்.

3️⃣ இறுதி நன்மையை அனுபவியுங்கள்.

லூக்கா 24: 51-53

கிறிஸ்து தனது முழு சுயத்தையும் தேவனுக்குச் சமர்ப்பணம் செய்தது, அவலமான நம்மை விடுவிக்க சிலுவையில் அறையப்படுவதற்கு வழிவகுத்தது .

இத்தனை நாட்கள் துன்பம் மற்றும் போராட்டத்திற்கு பிறகு, இறுதியில், யாரும் வழங்க முடியாத அந்த உறுதியான பேரின்பத்தை அனுபவிக்க கர்த்தர் நமக்கு உதவுவார். எந்த சூழ்நிலையிலும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய சித்தத்திற்காக ஜெபிக்க வேண்டும்.

யோபின் வாழ்க்கை இந்த முழு செயல்முறைக்கும் ஒரு ஆழமான உதாரணம் ஆகும். ஒன்றுமில்லாத மனிதனிலிருந்து, அளவிட முடியாத ஆசீர்வாதங்களுடன் உயர்த்தப்பட்டிருக்கிறான். அப்படித்தான் அவர் தேவன் மீதுள்ள தீவிர விசுவாசத்தின் மூலம் உருவானார்.

அன்பானவர்களே,

வேலையைத் தீர்மானிப்பது, திருமணத் திட்டத்தைத் தொடருவது போன்ற நம் வாழ்க்கையின் முக்கியமான தேவைகளில் மட்டுமே நாம் தேவசித்தத்தைத் தேடுவது பொதுவான போக்கு. ஆனால் எந்த வேதனையான சூழ்நிலையிலும் தேவசித்தத்தை கேட்பது நம் பழக்கமாக இருக்கட்டும்.

அவருடைய விருப்பத்தைத் தேடுங்கள், அவருடைய வலிமையைப் புரிந்து கொள்ளுங்கள், இறுதியாக இறுதி நன்மையை அனுபவியுங்கள்.

அப்படி செய்ய சர்வ வல்ல தேவன் நமக்கு உதவி செய்வாராக.

ஆமென்

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻



Written by- Sis Acsah Nelson ,Ernakulam

Translation by - Sis Tephila Mathew USA

30 views0 comments

Recent Posts

See All

New year ( Encouraging Thoughts)

✨ *Encouraging thoughts* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *A Brand-New Outfit for a Brand-New Year!* Who doesn’t love the idea...

Looking back to move forward

വളർച്ചയുടെയും വെല്ലുവിളികളുടെയും പരിവർത്തനത്തിന്റെയും നിമിഷങ്ങൾ നിറഞ്ഞ ഒരു യാത്രയാണ് നമ്മുടെ ജീവിതം. കടന്നുപോയ നാളുകളിലേക്ക് ഒന്ന്...

Encouraging Thoughts ( Tamil)

✨ *ஊக்கமளிக்கும் சிந்தனை* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°• ★ *யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்- 9* _*"தேவன் அதை நன்மையாக...

Comments


bottom of page