✨ ஊக்கமளிக்கும் சிந்தனைகள் 😁
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•
★ யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் - 5
ஏனென்றால் கர்த்தர் யோசேப்புடன் இருந்தார்
ஆதியாகமம் 39: 1-6, 21-23
1. யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.
2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
3. கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:
4. யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.
5. அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.
6. ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.
21. கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
22. சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.
23. கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
அடிமையாக விற்கப்பட்டு எகிப்துக்குக் கொண்டுவரப்பட்டபோது யோசேப்பின் வாழ்க்கையில் வியத்தகு திருப்பங்கள் காணப்பட்டது. அவரது சூழ்நிலைகள் எதிராக இருந்தபோதிலும், "கர்த்தர் அவருடன் இருந்ததால்" யோசேப்பு செழித்தார்.
வசனம் 2ல் சொல்லப்பட்டது போல, யோசேப்பு, எகிப்திய எஜமானரான போத்திபாரின் வீட்டில் ஒரு செழிப்பான மனிதராக இருந்தார். ஏனெனில், ஆண்டவர் அவருடன் இருந்து, அவர் செய்த அனைத்தையும் வாய்க்க செய்தார். போத்திபார் கவனித்து, யோசேப்புக்கு அதிக பொறுப்புகளை ஒப்படைத்தார். இறுதியில் அவரை பார்வோனின் முழு குடும்பத்தின் மேற்பார்வையாளராக்கினார். நம்பிக்கை மற்றும் அதிகாரத்தில், இந்த நிலைக்கு யோசேப்பு உயர்த்தப்பட்டதென்பது, மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பிரசன்னம் ஒரு தனிநபரை எவ்வாறு உயர்த்த முடியும் என்பதை விளக்குகிறது.
ஒரு தனிமனிதன் மீது வருகிற கர்த்தருடைய ஆசீர்வாதம் மற்றவர்களுக்கும் நீட்டிக்க முடியும் என்று யோசேப்பின் சரித்திரம் வெளிப்படுத்துகிறது. வசனம் 5 இல், போத்திபாரின் வீட்டை கர்த்தர் "யோசேப்புநிமித்தம்" ஆசீர்வதித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போத்திபாரின் வீடு மற்றும் வயல்களில் உள்ள அனைத்தும் இதனால் ஆசீர்வதிக்கப்பட்டது. தெய்வீக தயவின் இந்த விளைவு யோசேப்பின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது: அவருடைய ஆசீர்வாதங்கள் அவருக்கு மட்டுமல்ல, ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
கர்த்தருடன் நமது உறவு ஆழமாக வேரூன்றினால் மற்றவர்கள் நம்மை உற்றுப்பார்க்கும் அளவிற்கான வெற்றியடைவோம். இந்த தெய்வீக தொடர்பைத் தேடி வளர்ப்பது, நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் செழிப்பு, செல்வாக்கு மற்றும் ஆசீர்வாதங்களால் நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
சிறையில் இருந்தபோதும், யோசேப்பு தொடர்ந்து கர்த்தருடைய தயவை அனுபவித்தார். கர்த்தர் யோசேப்புடன் எப்படி இருந்தார் என்பதையும் அவருக்கு எப்படிப்பட்ட இரக்கம் காட்டினார் எனவும் சிறைக் காவலரின் தயவை அவருக்கு வழங்கினார் என்பதையும் 21-23 வசனங்களில் காண்கிறோம். இதனால் சிறைச்சாலையின் அனைத்து கைதிகளுடைய மற்றும் சிறைச்சாலையின் செயல்பாடுகளுடைய பொறுப்பேற்றுக் கொள்ள வழிவகுத்தது. மீண்டும், யோசேப்பு எதைச் செய்தாலும், "கர்த்தர் அதை செழிக்கச் செய்தார்" என்ற வார்த்தை வலியுறுத்துகிறது.
தேவனுடைய ஆவியானவர் யோசேப்புடன் இருந்தார் என்று பார்வோன் சாட்சியளிப்பதையும் நாம் (41:38)ல் வாசிக்கிறோம். மேலும் அவர் யோசேப்பை எகிப்து தேசம் முழுவதற்கும் ஆட்சியாளராக மாற்றினார். அவர் கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் வெளிப்படுத்தினதால் யோசேப்பின் செல்வாக்கு அதிகமாக பெருகிற்று. இதேபோல் நம்முடைய செயல்களும் தேவன்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையும் மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக இருப்பதுமல்லாமல், அவர்களை கர்த்தரிடம் நெருங்கி வரச் செய்து, அவர்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
எடுத்துக்கொள்ளவேண்டிய சிந்தனைகள்
¶ கர்த்தருடைய பிரசன்னத்தால், நாம் துன்பங்களை வென்று, பெரிய வெற்றியைப் பெற்று, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க முடியும்.
¶ நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் மூலமும், உண்மையுள்ளவர்களாக இருப்பதன் மூலமும், நம் வாழ்வில் தெய்வீக நோக்கத்தை அறிந்துகொள்வதன் மூலமும், கர்த்தருடைய தயவு நம் வாழ்க்கையை வளமாக்கி, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நீட்டிக்கப்படுவதை அறிந்துகொள்ள முடியும்.
📖 இந்த நாளுக்கான வசனம் 📖
சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
Writer- Sis Shincy Jonathan Australia 🇦🇺
Translation- Br Jaya Singh Trivandrum
Mission sagacity Volunteer
Tamil
Komentarze