top of page
Writer's picturekvnaveen834

ஊக்கமளிக்கும் சிந்தை 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°• ★ சவுலின் பொறுமையின்மையினின்று நுண்


1. சாமுவேல் 13:8-13

⁸அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.

⁹அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.

¹⁰அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

¹¹நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர்வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே,

¹²கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.

¹³சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.

வேதாகமத்தில், பொறுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் பல சம்பவங்கள் உள்ளன. ஆபிரகாம், மோசே, தாவீது மற்றும் யோபு ஆகியோர் பொறுமையுடன் காத்திருந்தனர், அதே சமயம் சாராள் மற்றும் உசியாவின் கதைகள் பொறுமையின்றி செயல்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை நினைவூட்டுகின்றன.

மேற்கண்ட வேதபகுதியில் சவுலின் பொறுமையின்மையையும் அதன் பின்விளைவுகளையும் பார்க்கிறோம். கில்காலுக்கு சாமுவேல் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், அறிவுறுத்தப்பட்டபடி காத்திருக்காமல், தகன பலியைச் செலுத்த அது சவுலை வழிநடத்தியது.

இந்த முடிவைத் தூண்டியவை எவை?

வனம் மாற்றப்பட்டது*

தன் ஆட்கள் சிதறியதை கவனித்த சவுலின் கவனம் திரும்பியது. கர்த்தரை நம்பாமல், தன் சொந்த பலத்திலும் அதிகாரத்திலும் சாய்ந்தான்.

பேதுருவைப் போலவே, நாமும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கவனம் திருப்பி, நம் வாழ்வில் வரும் புயல்கள் மற்றும் பிரச்சனைகளைப் பார்த்தால் மூழ்கத் தொடங்குவோம். இதைத் தவிர்க்க, கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்தி, அவரை மட்டுமே நம்புவோம்.

யம்*

பெலிஸ்தர்கள் மிக்மாசில் கூடிவரத் தொடங்கியபோது சவுல் அவர்களுக்குப் பயந்தான். அவர்கள் தனக்கு எதிராக இறங்கிவிடுவார்களோ என்று அஞ்சினார்.

நம்பிக்கை தளரும்போது, ​​கவலையும் சந்தேகமும் பிடித்துக்கொள்ளும். கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பதன் மூலம், பயம் அதன் பிடியை இழக்கிறது. நம்முடைய பயம் கர்த்தருக்கு இருக்க வேண்டும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய அது நம்மை வழிநடத்தும்.

அடுத்து என்ன நடந்தது?

ிறரைக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார்*

சவுலின் பொறுமை இன்மைக்கு சாமுவேலின் காலதாமதம் தான் காரணம் என்று அவரை மறைமுகமாக பழி சுமத்தினார். பொறுமையின்மை பெரும்பாலும் நம் சொந்த தவறுகளுக்கு நம்மைக் குருடாக்கி, மற்றவர்கள் மீது பழியைத் திருப்பிவிடுகிறது

ாக்கு சொல்ல ஆரம்பித்தார்*

கர்த்தருடைய தயவைப் பெறுவதே சவுலின் குறிக்கோளாக இருந்தது, ஆனால் அவருடைய செயல்கள் தவறாக வழிநடத்தப்பட்டன. சாமுவேலின் கூற்றுப்படி, அது ஒரு முட்டாள்தனமான செயல். சாராளின் வாழ்க்கையிலும் இதைப் பார்க்கிறோம்.

கவனமாக இருப்போம். நமது நோக்கங்கள் நம் பார்வையில் சரியாகத் தோன்றினாலும், கர்த்தர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அவற்றுடன் அவை ஒத்துப்போவதை உறுதி செய்வோம்.

திர்விளைவுகளை சந்தித்தார்*

சவுல் தனது ராஜ்யத்தை ஸ்தாபிப்பதை பாதித்த விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது.

எடுத்துக்கொள்ள வேண்டியவை:

தேவன் மீது கவனம் செலுத்துங்கள்: வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில் நாம் கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

பயத்திற்கு மேலான நம்பிக்கை: கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பது பயத்தையும் சந்தேகத்தையும் போக்க உதவுகிறது, தயக்கமின்றி அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய உதவுகிறது.

பொறுப்பேற்க: நம்முடைய செயல்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும், கர்த்தருடைய சித்தத்துடன் நமது நோக்கங்களைச் சீரமைக்க வேண்டும், சாக்குப்போக்குகளைத் தவிர்க்க வேண்டும்.

📖 இன்றைய தினத்திற்கான வேத பகுதி 📖

சங்கீதம் 37:7

கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

🙏🙏🙏🙏🙏🙏🙏


AUTHOR: ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍ Sister Shincy Susan


Translation

Sister Tephilla Mathew

21 views0 comments

Recent Posts

See All

Special Thoughts

✨ *Encouraging thoughts* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°• ★ *Lessons from the life of Joseph - 7* *_Are you ready to sacrifice?_*...

Special Thoughts

✨ *പ്രോത്സാഹജനകമായ ചിന്തകൾ* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•°• *★ യോസേഫിൻ്റെ ജീവിതത്തിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ - 6* *_ദൈവത്തിൻ്റെ...

SPECIAL THOUGHTS

✨ *Encouraging thoughts* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°• *★ Lessons from the life of Joseph - 6* *_The power of understanding...

Comments


bottom of page